கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்பு: பாஜ கட்சி உறுப்பினர் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி ஆந்திராவில் கைது: துப்பாக்கி முனையில் தனிப்படை போலீஸ் அதிரடி

சென்னை: கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல வடசென்னை ரவுடி கல்வெட்டு ரவியை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். இவன் சமீபத்தில் தான் பாஜவில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கல்வெட்டு ரவி. காசிமேடு பகுதியில் கல்வெட்டு ரவி ரவுடியாக வலம் வந்த மலைக்கண் செல்வத்துக்கு வலது கரமாக இருந்தான். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக வட்ட செயலாளர் சண்முகம் என்பவரை கொலை செய்ததன் மூலம் பெரிய ரவுடியாக உருவெடுத்தான்.

அதன்பிறகு கொலை மற்றும் ஆள்கடத்தல் மூலம் வடசென்னையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரை சுற்றி எப்போதும் 10 அடியாட்கள் இருப்பார்கள். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால், கொலை செய்யக்கூடிய நபரின் செல்வாக்கை பொறுத்து 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை நிர்ணக்கப்படுகிறது. மேலும், பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கும், கல்வெட்டு ரவிக்கு இடையே மாமூல் வசூலிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தனர். இதனால் காக்கா தோப்பு பாலாஜி கல்வெட்டு ரவியை கொலை செய்ய பல வகையில் முயற்சி செய்தார்.

அதை தெரிந்து கொண்ட கல்வெட்டு ரவி, காக்கா தோப்பு பாலாஜியின் எதிரியான வியாசர்பாடி ரவுடி நாகேந்திரனுடன் சேர்ந்து கொண்டு காக்கா தோப்பு பாலாஜியை எதிர்த்து வந்தான். கடந்த சில மாதங்களாக காக்கா தோப்பு பாலாஜியுடன் சமரசமாகிவிட்டான். இருவரும் சேர்ந்து சாம்போ செந்திலை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தனர்.வடசென்னையில் பிரபல தாதாவாக உருவெடுத்த கல்வெட்டு ரவி மீது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. 6 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

காவல் துறை என்கவுன்டர் பட்டியலில் கல்வெட்டு ரவி 3வது இடம் பிடித்து இருந்தான். இதையடுத்து, காவல் துறை எப்ப வேண்டும் என்றாலும் என்கவுண்டர் செய்ய கூடும் என்ற அச்சத்தில் தலைமறைவாகவே கல்வெட்டு ரவி வாழ்ந்து வந்தான்.இதற்கிடையே ரவுடி கல்வெட்டு ரவி போலீஸ் என்கவுண்டரில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், சாம்போ செந்திலிடம் இருந்து தப்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்தான்.

அதன்பிறகு தனது அரசியல் பலத்தை வைத்து வடசென்னையில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து வந்தான். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் ரவுடி கல்வெட்டு ரவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதைதொடர்ந்து வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திராவில் துப்பாக்கி முனையில் அவனைகைது செய்தனர். பிறகு நேற்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் கொலை வழக்கு, ராயப்பேட்டை மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி பொக்கை ரவியை ெகாலை செய்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இதனால் பாஜவில் சேர்ந்ததால் தப்பிக்கலாம் என்று நினைத்தான் ஆனால் சட்டம் தனது கடமையை செய்துள்ளது.

Related Stories:

>