×

சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கருமாபாளையம் கிராமத்தில் வீடு வீடாக சென்று புதிதாக பரவும் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில், மாணவர்கள் வீடு வீடாக சென்று இன்ஃபுளூயன்சா காய்ச்சல் என்பது பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, இது போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும், பொது மக்கள் சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது, இந்த வகையான காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும், அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும், முன்னெச்சரிக்கையாக அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது, தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப கூடாது  என்பது உள்பட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, பூபதிராஜா, விஜய் தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை  ஊர் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.ஆட்டோ டிரைவர் நடராஜன் கூறியதாவது: வடமாநிலத்தவர்கள் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்போது அல்ல. எப்போதும் பிரிவினை என்பது கிடையாது. சிலர் அரசியல் லாபத்திற்காக போலீயான வீடியோவை சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.  ஆனால் அது தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை. தமிழ்நாடு திராவிட நாடு. இங்கு போலிகளுக்கு இடம் கிடையாது. இந்த பிரச்சனை கிளம்பிய நாள் முதல் தற்போது வரை கலெக்டர், உள்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பம்பரமாய் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் வடமாநில வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக பீகார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கும் போலீசார் வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.   அதனால் இந்த விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடு மிகவும் திருப்திகரமானதாய் உள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடும், அரசின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது….

The post சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chikkanna college ,Tirupur ,Chikkanna Government Arts College Country Welfare Project Unit-2 ,Karumapalayam ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்