கெஜ்ரிவால் பற்றி போலி வீடியோ பகிர்வு சம்பித் பத்ராவுக்கு எதிராக ஆம்ஆத்மி போலீசில் புகார்

புதுடெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் பற்றிய ஜோடிக்கப்பட்ட போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜ கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு எதிராக டெல்லி போலீசில் ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் குரல் கொடுத்தது போன்ற வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டதாக கூறி பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மன்னிப்பு கேட்டகாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார். இதன்தொடர்ச்சியாக, ஆம் ஆத்மி கட்சி மற்றொரு புகாரையும் டெல்லி போலிசில் வழங்கியுள்ளது. அதில், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட போலி வீடியோவை பாஜ கட்சியின் செய்தி தொடர்பாளர் பரப்பியதாகவும், அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ”ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து புகார் வந்துள்ளது. அதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

Related Stories:

>