அவங்களுக்குத்தான் ஆதரவு ஆனா 5 சீட் வேணும்: விஸ்வகர்மா சங்கம் போர்க்கொடி

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொல் வேலை, மர வேலை, சிற்ப வேலை, பாத்திர வேலை, தங்க வேலை என ஐந்தொழில் புரிபவர்கள் விஸ்கர்மா சமுதாயத்தினர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் 10 சதவீதம் பேர் உள்ளனர். வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவை தான் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் எங்கள் சமுதாயத்திற்கு 5 சீட்களை அதிமுக ஒதுக்க வேண்டும். தற்போது ஒரு எம்எல்ஏ மட்டும் இருக்கிறார். அவர் அமைச்சராக பதவி வகிக்கிறார்.

அதுபோல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு 20 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.  திருத்தங்கலில் தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு உடனே நிதி ஒதுக்கி கட்டுமானப் பணியை துவங்க வேண்டும் என்றார். அஞ்சு சீட் விஷயத்தை கேள்விப்பட்ட உள்ளூர் அதிமுக தலைகள் தங்களுக்குள் சிரித்துக் ெகாண்டே சொன்னார்களாம்..... வாய்ப்பில்லை ராஜா.. .வாய்ப்பில்லைனு!

Related Stories:

>