×

2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி

டெல்லி: 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜன 16ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2 முதல் 18 வயதுடையோருக்கு 2 மற்றும் 3ம் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சோதனை வெற்றிகரமாக நடந்தால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மத்திய அரசு குறிப்பில் தெரிவித்துள்ளது.

The post 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Drug Control Board ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...