சட்டவிரோத கட்டிடம் இடிப்பு: வனத்துறை அதிரடி

சாம்ராஜ்நகர்: வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக கட்டியிருந்த பழங்குடியின மக்களின் வீடுகளை வனத்துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பேடகுலி எஸ்டேட் வனப்பகுதிக்குள் பழங்குடியினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இவை சட்டவிரோதமாக கட்டியுள்ளதால் இவற்றை அகற்ற கோரி வனத்துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. இதனால் நேற்று காலை ஜே.சி.பி. இயந்திரத்தை எடுத்து வந்த அதிகாரிகள் மசனம்மா, பார்வத்தம்மா ஆகியோரின் இரண்டு வீடுகளை இடித்து தள்ளினர். அதே போல் மீதமுள்ள வீடுகளை 10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு இதே பகுதியில் வசிக்க உரிமை பத்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories:

>