நீங்கள் தேடிய சரியான தலைவர் நானே தான்: இலங்கை அதிபர் கோத்தபய பேச்சு

கொழும்பு: நீங்கள் தேடிய சரியான தலைவர் நானே தான்,’’ என்று இலங்கை  அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.இலங்கையின் 73வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தலைநகர் கொழும்புவில் நடந்த பேரணியில் பங்கேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது: நாட்டின் உயரிய பதவியை தக்க வைத்து கொள்ள, நீங்கள் தேடிய சரியான தலைவர் நான்தான்.  நான் புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள இனத்தவன் என்று கூறிக்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டேன். புத்த மத போதனைகளின்படியே நாட்டை வழி நடத்தி செல்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து மத, இன மக்களை பாகுபாடின்றி மதித்து நடத்தி, புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் அமைதியான ஆட்சி வழங்கி வருகிறேன். இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைவரும் சம உரிமையை அனுபவிக்க உரிமை உள்ளது. மதம், இனத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் அரசு இடம் கொடுக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>