விவசாயி குடும்பத்துக்கு பிரியங்கா ஆறுதல்

புதுடெல்லி: கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தின்போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரை சேர்ந்த விவசாயி நவ்ரீத் சிங் (27) டிராக்டர் கவிழ்ந்து இறந்தார். இவருக்காக நேற்று நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக, பிரியங்கா காந்தி காரில் அமர்ந்திருக்கும் போட்டோவும், அவர் தனது காரை சுத்தம் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Related Stories:

>