×

உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

சேத்தியாத்தோப்பு, மார்ச் 7: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கீழ் கொள்ளிடம் உபவடிகால் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குமராட்சி ஒன்றியம் பூலாமேடு கிராமத்தில் உளுந்து பயிரில் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தவபிரகாஷ்  அறிவுறுத்தலின்படி திட்ட பொறுப்பு விஞ்ஞானி முனைவர் அரிசுதன் உளுந்து பயிரில் ரகங்கள் பற்றியும், களை மேலாண்மை பற்றியும், பயறு ஒன்டர் பற்றியும், டிஏபி 2 சதவீதம் கரைசல் தயாரித்து தெளிக்கும் முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இணைப்பேராசிரியர் முனைவர் லதா உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றியும், அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் தெளிவாக விளக்கம் அளித்தனர்….

The post உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chethiyathoppu ,Vrudhachalam Regional Research Station ,Tamil Nadu Agricultural University ,Kollidam ,
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி