எல்சிஏ மார்க் -1 முதல் விமானம் 2024ல் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்: எச்ஏஎல் தலைவர் மாதவன் தகவல்

பெங்களூரு: எல்சிஏ மார்க் -1 முதல் விமானம் 2024 வருடம் மார்ச் மாதம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என எச்ஏஎல் தலைவர் மாதவன் கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேஜஸ் விமானத்தின் மேம்பட்ட எல்சிஏ மார்க்-1  முதல் விமானம் 2024 மார்ச் மாதம் தயாராகிவிடும். இதைத்தொடர்ந்து மற்ற விமானங்கள் தயார் செய்யப்படும். சிறிய அளவிலான ஆள் இல்லா விமானத்தை உள்ளடங்கிய விமானம் தயாரிக்கும் பணியில் எச்.ஏ.எல். தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது பாதுகாப்பு படைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதுதவிர சுகோய்-30 விமானத்தை மேம்படுத்தவும் விமானப்படை ஆர்டர் அளித்துள்ளது. நாசிக் பிரிவில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. மார்க்-1 விமானத்திற்கு தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இலகு ரக போர் விமானத்தின் விலை ரூ.309 கோடி ஆகும். பயிற்சி அளிக்கும் விமானத்தின் விலை ரூ.280 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்.ஏ.எல். தொடர்ந்து தனி சிறப்பு மிக்க விமானங்களின் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும், என்றார்.

Related Stories:

More