×

விளைநிலங்களை என்எல்சி கையகப்படுத்தும் விவகாரம் அமைச்சர், ஆட்சியருடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு

கடலூர், மார்ச் 8: கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம், விளைநிலங்களை கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏக்கள் தலைமையிலான குழுவினர் அமைச்சர் மற்றும் ஆட்சியரை நேற்று சந்தித்து முறையிட்டனர். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போது பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சன் முத்துகிருஷ்ணன், ஜெகன், கார்த்திகேயன், செல்வ மகேஷ் மற்றும் நிர்வாகிகள் என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம் கூறுகையில், கடலூரில் ஆட்சியர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சந்தித்து என்எல்சி நிர்வாகத்தின் நிலம் எடுப்பு விவகாரம் குறித்து எடுத்துரைத்தோம். 3வது சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் எடுப்பு என்பது நோக்கமல்ல என்பதை எடுத்துரைத்தனர். மீறினால் தொடர் போராட்டங்கள் நடைபெறும். விவசாய நிலம் 25,000 ஏக்கர் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என்எல்சி சேர்மன் நேரடியாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்றனர்….

The post விளைநிலங்களை என்எல்சி கையகப்படுத்தும் விவகாரம் அமைச்சர், ஆட்சியருடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Bamako MLAs ,Cuddalore ,Cuddalore district ,BAMA MLAs ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்