வீடியோ வைரலானதால் அவமானம்: திருடிய மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட தந்தை

மேச்சேரி: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மண்ணாதவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(41). பாஸ்ட் புட் உணவக மாஸ்டர். இவரது மூத்த மகன் ரசிகரன் (17), 9ம் வகுப்பு படித்துவிட்டு 2 ஆண்டுகளாக ஊர் சுற்றி வந்துள்ளான். கடந்த வாரம் மேச்சேரி பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டு, கோயில் உண்டியல் உடைப்பு மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ரசிகரனை தொடர்புபடுத்தி தகவல் வெளியானது. இந்நிலையில், ரசிகரன் பற்றிய ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் பரவியது. சைக்கிள் திருடிய அவனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி அடித்து உதைக்கும் காட்சிகளை பரவ விட்டிருந்தனர்.  இதனால், அவமானத்திற்குள்ளான குமார் நேற்று காலை அவனை கூப்பிட்டு கடுமையாக கண்டித்துள்ளார்.

இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குமார், ரசிகரனை பயங்கரமாக தாக்கி இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்கில் தொங்க விட்டுவிட்டு, மேச்சேரி போலீசில் சரணடைந்தார். போலீசார் சென்று பார்த்தபோது அவன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 

Related Stories:

>