வணிக வைசிய சங்க ஜாதக பரிவர்த்தனை கூட்டம்

பெங்களூரு: பெங்களூரு வணிக வைசிய சங்கத்தின் சார்பில் 52வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம் வரும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அல்சூர் சிஎம்எச் சாலை 18வது கிராசில் உள்ள சிவானுபவ மடத்தில் பகல் 1 மணிக்கு நடக்கிறது. சங்க இணை செயலாளர் கண்ணன் செட்டியார் மேற்பார்வையில் சங்க தலைவர் மோகன் தலைமையில், சங்க செயலாளர் சங்கர் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தை ரவிகுமார், செந்தாமரை, திருப்பதி, கருணாகரன், லட்சுமணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்கும் சமூகத்தினர், தங்கள் வரன்களின் முழு விவரங்கள், புகைப்படம், ஜாதகம் உள்ளிட்ட விவரங்கள் கொண்டுவர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>