×

கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பயணம் வேட்டவலத்தில் தவக்காலத்தையொட்டி

வேட்டவலம்: வேட்டவலத்தில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையொட்டி சிலுவைப்பாதை பயணம் மேற்கொண்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர். வேட்டவலம் மறைக் கோட்டம் சார்பில் தவக்காலத்தையொட்டி சிலுவைப்பாதை பயணம் நிகழ்ச்சி நேற்று மாலை வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கியது. வேட்டவலம் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத் தந்தை வேளாங்கண்ணி, பங்குத்தந்தைகள் ஜோசப்ராஜ், அருள் ஜேம்ஸ், லாரன்ஸ், ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, இயேசுவை சிலுவையில் அறைவதை நினைவுபடுத்தும் 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் வேட்டவலம் மலையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தை சிலுவைப்பாதை வந்தடைந்தது. முடிவில் ஜமீன் கூடலூர் பங்குத்தந்தை ராயப்பன் மறையுரை வழங்கினார். நிகழ்ச்சியில் வேட்டவலம் மறை வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், ஜமீன்கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப்பூண்டி, மதுராம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவைப்பாதை நிகழ்ச்சியையொட்டி புனித சூசையப்பர் கோயில் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. வேட்டவலத்தில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையொட்டி நேற்று சிலுவைப்பாதை பயணம் மேற்கொண்டனர்….

The post கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பயணம் வேட்டவலத்தில் தவக்காலத்தையொட்டி appeared first on Dinakaran.

Tags : Christians ,Lent ,Vettavalam ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி