×

பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவச கல்வி மையம்

திருவள்ளூர்: திருவள்ளுர் அடுத்த புன்னம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழங்குடியினர் காலனியில் நியூ ஃபேஸ் பவுண்டேஷன்  சார்பில் குழந்தைகளுக்கான கல்வி மையம்  திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் புன்னம்பாக்கம் சுந்திரமுர்த்தி,  ரோஜா தாமஸ், ஒன்றிய கவுன்சிலர் விமலாகுமார் ஆகியோர் கல்வி மையத்தை தொடங்கி வைத்தனர்.  இந்த கல்வி மையம்  இந்த பகுதி குழந்தைகளுக்காக நிரந்தரமாக செயல்படும் என்றும், குழந்தைகளுக்காக  பயிற்சி அளிக்க தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அறிவைத் தருவதே எங்கள் நோக்கம் என்று நியூ ஃபேஸ் பவுண்டேஷனின் நிறுவனர் சங்கர் தெரிவித்தார். இந்த கல்வி மையம் படிப்படியாக வளர்ந்து, ஐ.ஏ.எஸ். பயிற்சி மையமாக வளர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், அதற்கான அனைத்து முற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்று பவுண்டேஷன் பொதுச் செயலாளர்  சிவகுமார் தெரிவித்தார்.    இதனைத் தொடர்ந்து, கல்வி மையத்தை நிர்வகித்து வரும் ஆசிரியை விசாலாட்சிக்கு பவுண்டேஷன் சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும், குழந்தைகள் படிப்புகளுக்கான நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டன. முடிவில் செயலாளர் சுகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவுண்டேஷன்  நிர்வாகிகள் பன், சக்திவேல், தினேஷ், ஜெயக்குமார்  ஆகியோர் செய்திருந்தனர்….

The post பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவச கல்வி மையம் appeared first on Dinakaran.

Tags : Free Education Center for Tribal Children ,Tiruvallur ,New Face Foundation ,Punnambakkam Panchayat ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...