×

2022-23ம் நிதியாண்டில் வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்த ரூ.70 கோடி நிதியில் ரூ.58.35 கோடியில் திட்ட பணிகள்: ரூ.11.65 கோடியை பயன்படுத்த முடியவில்லை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2022-23ம் நிதியாண்டில் வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்த ரூ.70 கோடியில் ரூ.58.35 கோடியில் திட்ட பணிகள் செய்ய முடிந்ததாகவும், ரூ.11.65 கோடியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால், கவுன்சிலர்கள் இல்லாமல் 2016 முதல் 2022 ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் ஆணையர், துணை ஆணையர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் என அனைவரும் மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்டு மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 175க்கு மேல் வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். 2022-2023 நிதியாண்டில் ரூ.2 கோடி மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்காகவும், ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதை அடுத்தடுத்து நடந்த மாமன்ற கூட்டத்தில், தங்களது வார்டு மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்று பல மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். 2022-2023 நிதியாண்டில் ரூ.2 கோடி மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்காகவும், ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து விலையும் அதிகமாகிவிட்டது எனவே அந்த நிதி போதவில்லை என கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதில், மொத்தமுள்ள ரூ.70 கோடி வார்டு மேம்பாட்டு நிதியில், ரூ.66.32 கோடி மதிப்பில் 660 பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  மேலும், ரூ.58.35 கோடி மதிப்பில் ரூ.559 பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது. ஆனால் ரூ.34.80 கோடி மதிப்பில் 406 பணிகளுக்கு மட்டுமே இதுவரை ஒப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3.17 கோடி மதிப்பில் 46 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  2022-23ம் நிதியாண்டு முடிய சில  நாட்களே உள்ள நிலையில், ஏற்கெனவே ஒப்பம் அளிக்கப்பட்டது மற்றும் புதிதாக  ஒப்பம் கோரப்பட்டது என கணக்கிட்டால் ரூ.58.35 கோடிக்கான பணிகள் தான்  மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மீதம் ரூ.11.65 கோடி பயன்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

The post 2022-23ம் நிதியாண்டில் வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்த ரூ.70 கோடி நிதியில் ரூ.58.35 கோடியில் திட்ட பணிகள்: ரூ.11.65 கோடியை பயன்படுத்த முடியவில்லை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,n't Corporation ,Dinakaran ,
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...