2 நாள் பயணமாக தமிழகம் வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை செங்கையில் விநாயகர் கோயிலை திறந்தார்

செங்கல்பட்டு:2 நாள் பயணமாக தமிழகம் வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், செங்கல்பட்டில் விநாயகர் கோயிலை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையை ஆய்வு செய்து  டாக்டர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 2 நாள் பயணமாக விமானம் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு, மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், போலீஸ் எஸ்பி கண்ணன், செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சாந்தி மலர், கோயில் நிர்வாகி துரை  தனசேகர் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயிலை தமிழிசை சவுந்தரராஜன் திறந்து  வைத்து சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டுகளை பார்வையிட்டார். அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர், மருத்துவ  கல்லூரி டாக்டர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்.இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்துக்கு சென்றார். அவருக்கு ஆலய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்குள்ள  நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். நாளை தி.நகரில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம்  ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

Related Stories:

More
>