கூலித் தொழிலாளியின் கண்களைக் கட்டி அடித்து துன்புறுத்தல்: துன்புறுத்திய வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பணம் திருடியதாக கூறி கூலித் தொழிலாளியின் கண்களைக் கட்டி அடித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பாபநாசம் அருகே பூண்டியில் ராகுல் என்ற கூலித்தொழிலாளி பணம் திருடி விட்டதாக கூறி அப்பகுதியை சேந்த 4 பேர் கண்களை கட்டி பிரம்பால் சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாத கூலித்தொழிலாளி ராகுல் தன்னை விட்டுவிடுமாறு கதறினார். ஒரு கட்டத்தில் வலிதாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல் மயக்கமடைந்து அந்த இடத்திலேயே சரிந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்க நிலையில் இருந்த ராகுலை மேலும் தாக்கியது.

கண்களை கட்டி பிரம்பால் தாக்கிய வீடியோவையும் அந்த கும்பல் இணையத்த்தில் வெளியிட்டுள்ளது. வலி தாங்க முடியாத இளைஞர் ராகுல் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய அக்கம் அப்பக்கத்தினர், தஞ்சை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>