விவசாயிகள் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு

மும்பை: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. புறச்சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி, கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுக தீர்வை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பகிர்ந்துள்ளார்.

ரோஹித் சர்மா, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காணும்போது நம் தேசம் எப்போதும் வலிமையாக இருந்துள்ளது. நம் நாட்டின் நன்மைக்கான பங்களிப்பில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே அனைவரும் சுமுகத் தீர்வு காண ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

ரஹானே, நாம் ஒன்றாக இருந்தால் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது எதுவும் இருக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து நம் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்க்க பாடுபடுவோம். ஹர்திக் பாண்டியா: ஸ்டாங்கர் டுகெதர்.

ரவி சாஸ்திரி, இந்தியப் பொருளாதார அமைப்பின் முக்கிய எந்திரம் விவசாயம். விவசாயிகள் எந்த நாட்டின் பொருளாதார அமைப்பின் முதுகெலும்பாவார்கள். இது உள்நாட்டு பிரச்சனை, உரையாடல் மூலம் நிச்சயம் தீர்வு காணப்படும் ஜெய்ஹிந்த். அனில் கும்ப்ளே, கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>