நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய 2 பதிவுகள் நீக்கம்: டிவிட்டர் நிறுவனம் நடவடிக்கை..!

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய 2 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 70 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவை அந்த பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டம் குறித்து வெளியிட்ட ட்வீட் பதிவை பகிர்ந்தும் கங்கனா கடுமையாக விமர்சித்து இருந்தார். கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ’’ஒருவரும் அதைவிட்டு பேசாததற்கு காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க திட்டமிடும் தீவிரவாதிகள். எனவே அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும். அமைதியாக இரு முட்டாளே! உங்களைப்போல நாட்டை விற்பவர்கள் நாங்கள் அல்ல’’ என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ” எங்கள் வரம்பு அமலாக்க விருப்பங்களுக்கு ஏற்ப ட்விட்டர் விதிகளை மீறும் ட்வீட்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் ” எனக் குறிப்பிட்டு கங்கனா பதிவிட்ட இரு ட்வீட்களை ட்விட்டர் தளம் நீக்கியுள்ளது.

Related Stories:

>