×

வாக்கு இயந்திரங்கள் சரிபார்த்தவர்களுக்கு கமகம மட்டன் பிரியாணி... திருச்சி கலெக்டர் ‘ட்ரீட்’ : அதிர்ச்சியில் அரசியல் கட்சியினர்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தன. முதல்கட்டமாக டிசம்பர் 22ம் தேதி 570 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரமும் (கன்ட்ரோல் யூனிட்), 230 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரமும் (விவிபேட்), 26ம் தேதி 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் (இவிஎம்), 2,920 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியும், 4,330 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரமும் வந்தன. திருச்சி மாவட்டத்துக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை செய்யும் பணி (எப்எல்சி) டிசம்பர் 29ம் தேதி திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது. கலெக்டர் சிவராசு பணிகளை துவக்கி வைத்தார். தேர்தல் தாசில்தார் முத்துசாமி மேற்பார்வையில் 50 வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பெங்களூரு பெல் நிறுவனத்தை சேர்ந்த 14பொறியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதிய கலெக்டர் அலுவலக ஸ்ட்ராங்க் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறை, பெல் பெறியாளர்கள் மற்றும் பணியின் போது இருந்த அனைத்துக்கட்சியினருக்கு என 100 பேருக்கு நேற்று மதியம் கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை என தடபுடல் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. வழக்கமாக அரசியல் கட்சியினர் தான் தேர்தல் நேரங்களில் இதுபோல அசைவ விருந்து கொடுப்பர். ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு திருச்சி கலெக்டர் கொடுத்த அசைவ விருந்தை கண்டு அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் ஆச்சர்யத்துடன் விவாதித்து வருகின்றனர்.



Tags : parties , பிரியாணி
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...