×

சவுரி சவுரா போராட்ட தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை; தியாகிகளால் நாடு ஊக்கம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

கோரக்பூர்: உத்தரப்பிரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை இன்று காலை காணொலி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; அப்போது சவுரி சவுரா சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். எனினும் அவரது தியாகம் நினைவுகூரத்தக்கது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சவுரி சவுரா போராட்ட தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. சவுரி சவுரா போராட்ட தியாகிகளால் நாடு ஊக்கம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்; நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். சவுரி சவுரா போராட்டத்திலும் அவர்கள் பங்கெடுத்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில், விவசாயிகள் சுயசார்புள்ளவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா காலத்திலும் விவசாய துறை வளர்ச்சி பெற்றுள்ளது. விவசாயிகள் நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். விவசாய மண்டிக்களை லாபமானதாக மாற்ற பல நடவடிக்கை எடுத்துள்ளோம். வேளாண் சட்டங்களை விவசாயிகளை பாதிக்காது நன்மையே செய்யும்.இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் கூறினார்.

சவுரி சவுரா சம்பவம்
அப்போதைய ஆங்கிலேய அரசு இந்தியாவில் ஆட்சி செய்து பல சட்டங்களை இயற்றியது. அவற்றில் ரவுலட் சட்டமும் ஒன்று.இந்தியர்களை நசுக்கும் அதிகாரம் படைத்த இச்சட்டத்திற்கு எதிராக கடந்த 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ந்தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமைதி வழியில், வன்முறையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா பகுதியில் நடந்த இந்த ஒத்துழையாமை இயக்கத்தில், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  

அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலியானதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அதற்கு தீ வைத்தனர்.  இந்த சம்பவத்தில் 23 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஆங்கிலேய அரசாட்சியின் அடித்தளம் அசைந்தது.  சுதந்திர போராட்ட எழுச்சிக்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.  இதன்பின் 228 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களில் 172 பேர் பிரிட்டிஷாரால் தூக்கில் போடப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

Tags : martyrs ,Modi ,country ,Sauri Saura , The blood shed by the martyrs of the Sauri Saura struggle was not in vain; The country is inspired by martyrs: Prime Minister Modi's speech
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி