×

திரையரங்குகளில் நாளை முதல் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்த முடிவு

பெங்களூரு: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சினிமா திரையங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை நூறு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சினிமா வர்த்தக சபையினர் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், சுகாதாரத்துறை அமைச்சர்கள் சுதாகர், சிசி பாட்டீல் தலைமையில் நேற்று மாலை வர்த்தக சபையினருடன் கூட்டம் நடந்தது.

இதில், சிவராஜ்குமார், வர்த்தக சபை ஜெயராஜ், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரவீன்ராமகிருஷ்ணா, திரையங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் சந்திரசேகர், நடிகை தாரா அனுராதா, சாரா கேவிந்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரையரங்குகளில் 4 வாரங்களுக்கு 100 சதவீதம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Theaters , Theater, full percent seats, results
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...