×

குடியிருப்புகளில் திருடிய செக்யூரிட்டி கார்டு கைது

பெங்களூரு: பெங்களூரு பானஸ்வாடி குடியிருப்பில் திருடி வந்ததாக செக்யூரிட்டி கார்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு பானஸ்வாடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். விசாரணையில் அவர் வட மாநிலத்தை சேர்ந்த பீரேந்தர் குமார் என்று தெரியவந்தது. பானஸ்வாடியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகள் இவரை நம்பிதான் வீட்டை விட்டு செல்வார்கள்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பீரேந்தர் குமார், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி வந்துள்ளார்.

இந்நிலையில் திருட்டு தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் குடியிருப்பு வாசிகளுக்கு கிடைத்தது. அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்து பிடிக்க முற்பட்டபோது, தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையில் திருடிய நகைகளை விற்பனை செய்ய முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுவரை 8 வழக்கில் இவர் ஈடுபட்டுள்ளார்.

தற்போது அந்த திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. சோதனையில் இவரிடம் இருந்து 13 லட்சம் மதிப்பிலான 265 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 700 கிராம் வெள்ளி, தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவருடன் ரமேஷ் பிஷ்வாஸ் என்ற வாலிபரும் திருட்டில் ஈடுபட்டார். தற்போது வட மாநிலத்திற்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags : apartments , Residence, Security, Arrest
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்