×

பொருளாதார இழப்பு சம்பளம் இல்லை: துணை முதல்வர் விளக்கம்

பெங்களூரு,பிப்.4: பேரவையில் ஏடி ராமசாமி,. போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல்  இருப்பதற்கு காரணம் என்ன? என கேள்வி கேட்டார். இதற்கு துணை முதல்வரும்  போக்குவரத்து துறை அமைச்சருமான லட்சுமண் சவதி  பதில் அளித்து கூறியதாவது,
``கொரோனா  வைரஸ் காரணமாக மற்ற துறைகளை  போல் போக்குவரத்து துறையும் பாதிப்பை  சந்தித்தது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நான்கு போக்குவரத்து  கழகமும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது.  

அதன் காரணமாக தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.  முதல்வர் எடியூரப்பா இதை உணர்ந்து அரசு கஜானாவில் இருந்து ₹1760 கோடி  விடுவித்தார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம்   வழங்கப்பட்டன. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் இப்போது  ஓரளவுக்கு நிலைமை சரியாகியுள்ளது. ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் பாதி அளவு  சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜனவரி மாதத்திற்கான  சம்பளத்தை இன்னமும் வழங்க முடியவில்லை’’ என்றார்.

Tags : Loss , Economic Loss, Deputy Chief, Interpretation
× RELATED ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20%...