அமைச்சர் தொகுதியில் சசிகலா ‘வெல்கம்’ போஸ்டர்

சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதையடுத்து தமிழகம் முழுவதும் அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. அப்படி போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகிகள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்த  போதும் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் தொகுதி 50வது வட்டத்திற்கு உட்பட்ட ஷேக் மேஸ்திரி தெரு, துரை தெரு, சூரியநாராயணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக 50வது வட்ட துணைச்செயலாளர் ஏ.சி.சேகர் சசிகலாவை  வரவேற்கும் விதமாக விடுதலையாகி பூரண நலம் பெற்று வருகைதரும் அதிமுகவின் நிரந்தர கழக பொதுச்செயலாளரே வருக வருக என்று போஸ்டர் ஒட்டி உள்ளார். இதனால் ராயபுரம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>