ரவுடிகள் லிஸ்ட் எடுக்கும் போலீஸ்

தேர்தல் வர உள்ளதால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதும் ஸ்டேஷன் வாரியாக பிரச்னைக்குரிய கிராமங்கள், நபர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதா,  எந்த மாதிரியான பிரச்னைக்கு வாய்ப்புள்ளது என தரவுகள் சேகரித்து பிரச்னைக்குரிய கிராமங்கள், பகுதிகளில் கூடுதலா கண்காணிக்கப்படும்.  கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களை கணக்கெடுக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. சிறையில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள், கடந்த பல ஆண்டுகளாக எந்த  பிரச்னையிலும் ஈடுபடாமல் உள்ளவர்கள், தற்போதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் மீதும் மொத்தம் எத்தனை வழக்குகள் உள்ளன எனவும் கணக்கெடுப்பு  நடக்கிறது.

அதிலும் தேர்தல் ரவுடிகள் குறித்து ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடியாகுதாம். கூலிக்கு மாரடைக்கும் இவர்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக தகவல் சேகரிக்கப்படுதாம். தேர்தல் நேரத்தில் யாருக்காக அவர்கள் செயல்படுகிறார்கள்  என்ற தகவலும் இதில் அடங்குமாம். அப்படிபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை தொடங்க போகுதாம். இதனால்  தேர்தல் கால ரவுடிகள் வேறு மாவட்டத்துக்கு படையெடுப்பது குறித்து யோசிக்கிறாங்களாம்.

Related Stories:

>