அமேசான் சிஇஓ பதவி விலகுகிறார்

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியாக  ஜெப் பெசோஸ் இருக்கிறார். இவர் கடந்த 1997ம்  ஆண்டு முதல்  இந்த பதவியில் நீடித்து வருகின்றார். இந்நிலையில்,  தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக உள்ளதாக பெசோஸ் அறிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் அவர் பதவி விலக உள்ளார். இவருக்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் இணைய தள பொறுப்புக்களை நிர்வகித்து வரும் ஆன்டி ஜெசி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் இந்த மாற்றங்கள் நடைபெறும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories:

>