×

போராட்டக்களத்தில் இருந்து மாயம்: 115 விவசாயிகளை கண்டுபிடிக்க ஆம் ஆத்மி அரசு உதவும்: சிறையில் உள்ளவர்களின் பட்டியலைவெளியிட்டு கெஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: குடியரசு தின வன்முறை சம்பவத்திற்கு பிறகு காணாமல் போன விவசாயிகளை கண்டுபிடிக்க தனது அரசாங்கம் உதவும் என்றும், தேவை ஏற்பட்டால், துணை நிலை  ஆளுநரையும் மத்திய அரசையும் சந்தித்து இதுகுறித்து பேசுவதாகவும்  முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி பலருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த டெல்ி போலீசார், சுமார் 122 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அப்போது, டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின்னர் மாயமானதாக கூறி 29 பேரின் பெயர் பட்டியலை கெஜ்ரிவாலிடம் சமர்பித்தனர். மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான சதித்திட்டம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சிறையில் இருப்பவர்களை மருத்துவ குழுவை கொண்டு பரிசோதித்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, வன்முறை தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லியின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை கெஜ்ரிவால் வெளியிட்டார்.

இதுபற்றி பின்னர் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி டிராக்டர் பேரணி வன்முறை சம்பவத்திற்கு பின்னர் துரதிர்ஷ்டவசமாக கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு 115 பேரின் பட்டியலையும் தமது அரசு வெளியிட்டுள்ளது.அதில் சிறையில் உள்ளவர்களின் பெயர்கள், வயது, சொந்த ஊர் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், போராட்டக்களத்தில் இருந்து காணாமல் போன விவசாயிகளைக் அவர்களது குடும்பத்தினர் கண்டுபிடித்துக்கொள்ள இயலும். மேலும், காணாமல் போன விவசாயிகளை கண்டுபிடிக்க தனது அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும். தேவை ஏற்பட்டால், துணை நிலை ஆளுநரையும் மத்திய அரசையும் சந்தித்து பேசுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். எனினும், நீதித்துறை விசாரணைக்கான கோரிக்கை குறித்து முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : battlefield ,government ,Aam Aadmi Party ,prisoners ,Kejriwal , Farmers, magic, Kejriwal, promise
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...