×

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி டெல்லி எல்லைகளில் போலீசார் எழுப்பும் தடுப்புகள்: சர்வதேச எல்லையை ஒத்துள்ளதாக விவசாயிகள் புகார்

புதுடெல்லி: சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தற்காலிக சுவர்களைக் கட்டுவது, சாலைகளில் பெரிய ஆணிகளை பதிப்பது,  கான்செர்டினா கம்பி வேலிகளைப் பயன்படுத்தி தடையை ஏற்படுத்துவது என போலீசார்  மேற்கொண்டுள்ள பணிகளால் சர்வதேச எல்லையை ஒத்து இருப்பதாக பலரும் கருத்து  தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டக்களமான சிங்கு (டெல்லி-அரியானா), காஜிப்பூர்(டெல்லி-உபி), திக்ரி ( டெல்லி-அரியானா) ஆகிய மூன்று இடங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் மையமாக உள்ள சிங்கு எல்லை மற்றும் காஜிப்பூரில், போராட்டக்காரர்கள் முன்னேறி செல்வதை தடுக்க சாலையில் குறுக்கே இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் சிலாப்கள், கண்டெய்னர்கள் போன்றவற்றை சாலையில் குறுக்கே நிறுத்தியிருக்கின்றனர்.

இதனால் தற்போது காஜிப்பூர் பகுதியை பார்க்கும் பலருக்கும் சர்வதேச எல்லையை போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அமைதியின்மையைக் காட்டுகிறது,” என்று விவசாய சங்க தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறினார். இதேபோன்று”இதுபோன்று ஏற்படுத்தப்படும் பல தடைகள் நம் மனநிலையை குறைக்கவோ அல்லது  எங்கள் இயக்கத்தை பாதிக்கவோ செய்யாது. எங்கள் தலைவர்களின் அறிவுறுத்தல்களை  நாங்கள் பின்பற்றுகிறோம். மேற்கொண்டுள்ள பணிகளால் சர்வதேச எல்லையை ஒத்து இருப்பதாக பலரும் கருத்து  தெரிவித்துள்ளனர்.


Tags : borders ,Delhi ,border , Law and order, police, restraints, farmers, complaint
× RELATED காவிரி ஆற்றில் தமிழக எல்லையான...