×

அதிநவீன மின்சார பகிர்மானம் துவக்கம்

புதுடெல்லி: நரேலா தொழிற்பேட்டையில் ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. உற்பத்தி ஆலைகளில் உள்கட்டமைப்பு வசதி அதிகரிப்பு மற்றும் உற்பத்திக்கு ஆர்டர் குவிந்ததை அடுத்து, அந்நிறுவனங்களுக்கு மின்சார தேவையும் அதிகரித்தது. ஆனால், ஆலைகளுக்கு மின்சார விநியோகம் செய்ய நரேலாவில் பொருத்தி உள்ள மின் பகிர்மான (பவர் கிரிட்) சாதனம், பாடாவதி நிலையில் இருந்ததால், சீரான மின்சாரம் விநியோகம் செய்வது அடிக்கடி தடைபட்டது.

உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்த, நரேலாவில் புதிய பவர் கிரிட் அமைக்கும்படி மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 66/11 கேவி பவர் கிரிட் அங்கு அமைக்கப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில், முற்றிலும் பராமரிப்பு தேவைப்படாததும், அதிக மின் ஆற்றல் அளிக்கக் கூடியதுமான அந்த ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் பவர் கிரிட்டை ஜெயின் நேற்று தொடங்கி வைத்தார். ஆம் ஆத்மி அரசின் வாக்குறுதிகளில் ஒன்றான டெல்லியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் எனும் இலக்கின் முதல் கட்டத்தை எட்டியுள்ளோம். சீரான மின்சாரம் இந்த கிரிட்டில் இருந்து தடங்கல் இல்லாமல் விநியோகம் செய்யப்படும். எனவே, இந்த பகுதி உற்பத்தி ஆலைகள் நல்ல பலன் காண முடியும் என அப்போது அவர் கூறினார்.

Tags : Delhi, Electricity Distribution, Initiation
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...