×

தங்கவயலில் பேச்சு மொழியாக மாறி விட்ட தமிழ்: தாய் மொழியில் கல்வி கற்க தமிழ் சங்கம் வலியுறுத்தல்

தங்கவயல்: தங்கவயலில் தமிழர்கள் தாய் மொழியில் கல்வி கற்க மறந்ததால் இன்று வெறும் பேச்சு மொழியாக தமிழ் மாறிவிட்டது. எனவே தங்கவயல் தமிழர்கள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று தமிழ் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சங்க தலைவர் சு.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கவயலில் அனைவரும் தாய் மொழி தமிழில் கல்வி கற்று வந்தனர். தற்போது தமிழில் கல்வி கற்க தமிழர்கள் ஆர்வம் காட்டாததால், தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறி விட்டது.

கலை, கலாச்சாரம், பாரம்பரியம், கொண்ட மூத்த தமிழ் மொழியை மறக்காமல் படிக்க தமிழர்கள் முன்வர வேண்டும். இந்த அவல நிலையை எடுத்துரைத்து, தமிழை மீட்க, தங்கவயல் தமிழ் சங்கம், ‘தமிழில் படியுங்கள்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதன் படி வரும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று,  தங்கவயல் தமிழ் சங்கம் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் தமிழ் பற்று நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று தேவநேயப் பாவாணர் உருவ படத்தை பேராசிரியர் கிருஷ்ணகுமார் திறந்து வைக்கிறார். தமிழில் படியுங்கள் என்று வலியுறுத்தி அனந்த கிருஷ்ணன், நா.சு.மணி, ஆர். வி.குமார், அன்பரசன், கமல் முனிசாமி பலர் பேசுகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Tamil Sangam , Goldfields, spoken language, Tamil
× RELATED மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை...