×

நகரசபை கடைகளை மதிப்பிடுவதில் குளறுபடி: மாவட்ட திட்ட மேம்பாட்டு அதிகாரி ஆய்வு

தங்கவயல்: தங்கவயல் நகரசபை கடைகளை இ.ஆக்சன் மூலம் பொது ஏலம் விடுவதற்காக ஒவ்வொரு கடைகளின் இடஅளவு கணக்கீடு, கடைகளின் மதிப்பு மற்றும் கடைகளை அடையாளபடுத்துவதற்காக இடப்பட்ட எண் குறியீடு ஆகியவற்றில் நகரசபை பணியாளர் பல குளறுபடிகளை செய்துள்ளதாக வியாபாரிகள் உள்பட பலரும் புகார் செய்ததன் விளைவாக கோலார் மாவட்ட திட்ட மேம்பாட்டு அதிகாரி ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தங்கவயல் நகரசபைக்கு சொந்தமான எம்.ஜி.மார்க்கெட், ஆண்டர்சன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி இ.ஆக்சன் மூலம் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஏலம் விடப்பட உள்ள கடைகளின் இட அளவு, அதன் ரூபாய் மதிப்பு, கடைகளுக்கான அடையாள எண் ஆகியவற்றை நகரசபை இணையத்தில் வெளியிட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள், முன்னாள் நகரசபை தலைவர்கள் தாஸ் சின்னசவரி, தயானந்தா, ரமேஷ் ஜெயின் ஆகியோர் நகரசபை தலைவர், கமிஷனர், ஆகியோருக்கு புகார் செய்தனர். இதன் எதிரொலியாக கோலார் மாவட்ட திட்ட மேம்பாட்டு அதிகாரி ரங்கசாமி நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது நகரசபை பஸ் நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள் இது குறித்து அவரிடம் முறையிட்டனர். நகரசபை தலைவர் மற்றும் கமிஷனரை சந்தித்து பேசிய திட்ட அதிகாரி ஆய்வு தொடர்பான அறிக்கை கலெக்டருக்கு வழங்கப்படும் என்றார். மேலும் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பிறகே இ.ஆக்சன் பொது ஏலம் நடக்கும் என்றார்.

Tags : stores ,District Project Development , City Council, Development Officer, Inspection
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்