×

மண்ணுளி பாம்பை விற்க முயன்ற இருவர் கைது

பெங்களூரு: மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சித்த இருவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லாரி மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா தேலிகி கிராமத்தின் அருகே மூன்று வாலிபர்கள் மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலறிந்த அதிகாரிகள் மறுவேடத்தில் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணித்தனர்.

அப்போது மூன்று பேர் பாம்பு விற்பனை செய்ய முயற்சித்து வருவது தெரிய வந்தது. இவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்த போது ஒருவர் தப்பி சென்றார். இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரகட்டி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் (22), தேலிகி கிராமத்தை சேர்ந்த டி.சிவராஜ் (23) என்றும் தப்பி சென்றவர் பரசுராம் என்றும் தெரியவந்தது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் வனப்பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி சென்றவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags : Earthworm snake, sale, arrest
× RELATED கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி