“சசிகலா மீண்டும் சபதம் எடுத்துவிடுவார் என்பதற்காக ஜெயலலிதா மண்டபம் மூடல்”: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:எடப்பாடி பழனிசாமி மோடியின் அடிமை - பிஜேபியின் அடிமை, இது அனைவருக்கும் நன்று தெரிந்த ஒன்று. அதிமுக என்றால் அண்ணா திமுக அல்ல - அடிமை திமுகவாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிகொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. சசிகலாவின் காலில் விழுந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. கருணாநிதி ஆட்சி காலத்தில் நுழைவு தேர்வு முறையை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்த போது கூட நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு, மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று விடுவார் மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே தான் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டுள்ளது,என்றார்.

Related Stories:

>