அரியானாவின் ஜிண்டுவில் விவசாயிகள் கூட்டத்தில் விபத்து: விவசாய சங்கத் தலைவர் தியாகத்துக்கு லேசான காயம்

அரியானாவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் திடீரென மேடை சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜிண்டு என்ற இடத்தில் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் கூடிய இந்த கூட்டத்தில் டெல்லி போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பங்கேற்றார். மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த போது அந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் ராகேஷ் தியாகத் உள்ளிட்ட சில தலைவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையில் மக்கள் ஏறி நின்றதாலேயே மேடை சார்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர். கூட்டத்தின் முடிவில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், ட்ராக்டர் பேரணியன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோதியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>