டெல்லி வன்முறை வழக்கில் தலைமறைவான நடிகர் தீப் சித்து தலைக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி

புதுடெல்லி : டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் தொடர்புடைய 122 பேர்  கைது செய்யப்பட்டனர். வன்முறை சம்பவத்தில் குறிப்பிட்ட பகுதியில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து  தலைமை தாங்கியதாகவும், செங்கோட்டையில் சீக்கியக் கொடி ஏற்றப்பட்ட  விவகாரத்தில் தூண்டுதலாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள தீப் சித்து மற்றும் அவரது கூட்டாளிகள் ஜா ஜபீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோரை கைது செய்ய வசதியாக அவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க டெல்லி போலீசார் வெகுமதி அறிவித்துள்ளனர்.

அதன்படி, தீப் சித்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சமும், அவரது கூட்டாளிகளான ஜா ஜபீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ஒருவர் என்ற அடிப்படையில் ரூ.50,000 வெகுமதியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மற்றும் பஞ்சாபில் தனிப்படை போலீசார் நடிகர் தீப் சித்துவை தேடி அவரது வீட்டில் சோதனைகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: