இந்த நிலையில் பிரதமர் மோடி விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது. இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு, ஏரோ இந்தியா அருமையான தளம். இத்துறைகளில் எதிர்காலத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவாக மாறும் நமது தேடலுக்கு உத்வேகம் அளிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags : India ,Modi , Defense, Aerospace, India, Prime Minister Modi, Proud