×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரம்: ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் தகவல்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை எனவும், ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். கண்ணன் என்பவர் பதிவி செய்யாமல் முறைகேடாக களம் இறங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து வென்றது அம்பலமாகியுள்ளது. கடந்த ஜன.,16ல் உலக புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அதிக காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகும் நபருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் 12 காளைகள் பிடித்துள்ளதாக அறிவித்து அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் முதல் பரிசை வென்றது அம்பலமாகியுள்ளது. ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 33ம் எண் கொண்ட பனியன் அணிந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் களமிறங்கினார். 7 காளைகளை பிடித்த அவர் 3 சுற்றுகளுக்கு பிறகு காயம் ஏற்பட்டதால், தனது பனியனை கழற்றி, மற்றொரு நபரான கண்ணனிடம் வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.

அந்த பனியனை அணிந்து களமிறங்கிய கண்ணன், 5 காளைகளை அடக்கினார். இதனால், 33ம் எண் கொண்ட பனியன் அணிந்தவர் 12 காளைகள் அடக்கியதாக அறிவித்தனர். இதனையடுத்து 8 காளைகளை பிடித்து 2வது இடம் பிடித்த கருப்பண்ணன் என்னும் மாடுபிடி வீரர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். கோட்டாட்சியர் விசாரணை நடத்த கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.

Tags : Alankanallur Jallikattu ,Kottayam , Alankanallur, Jallikattu, impersonation, investigation report
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண்...