×

பெரம்பலூர் அருகே பொக்கினி ஆறு கரையோரம் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் லாடபு ரம் ஏரி, சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக நிரம்பியது.

இந்த ஏரி யில் இருந்து வழிந்துவரும் தண்ணீர் பொக்கினி ஆற்று வழியாகத்தான் செல்லும். இதனிடையே லாடபுரத்திலிருந்து மேலப்புலியூர் நோக்கி பொக்கினி ஆறு செல்லும் கரையோரப் பகுதிகளில் தனிநபர் ஒருவர் தென்னை மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப் பகுதி விவசாயிகளால் பலமுறை கூறியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுஅளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று குரும்பலூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், லா டபுரம் தெற்கு விஏஓ செந்தில் ராஜா மற்றும் பொதுப் பணித் துறையின் பணி ஆய்வாளர்கள் மாரியப் பன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் தென்னைமரக் கன்றுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Tags : Perambalur ,Pokkini River , Perambalur: There are 73 lakes in Perambalur district under the control of the Public Works Department Water Resources System.
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...