யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று இல்லாத யூனியனாக மாறியது அந்தமான் நிக்கோபார் தீவு

அந்தமான்: இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு தற்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா தொற்று தனது கோர முகத்தை காட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இப்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த தீவில் கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு பேரும் பூரண குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமானில் மொத்தமாக 4994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 4932 பேர் குணம் அடைந்துள்ளனர்.  62 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளது.

Related Stories:

>