பிரசாத் ஸ்டூடியோவிற்கு குட்பாய்!: புதிய ஸ்டூடியோவில் தனது இசை பணிகளை தொடங்கினார் இசைஞானி இளையராஜா..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் தனது புதிய ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜா இசையமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனது புதிய ஸ்டூடியோவில் முதல் பாடல் பதிவினை தொடங்கியிருக்கிறார். 700,00க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இசையமைப்பாளராக புகழ்பெற தொடங்கிய காலகட்டத்திலிருந்தே பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

பிரசாத் ஸ்டூடியோவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேறி கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி, அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தனது புது ஸ்டூடியோவை உருவாக்கி உள்ளார். கடந்த 25ம் தேதி ஸ்டூடியோ திறப்பு விழா நடந்த நிலையில் முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் திரைப்படத்திற்கான இசை கோப்பு பணிகளை முதற்கட்டமாக தொடங்கியிருக்கிறார். இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கி வரும் படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடத்தி வருகின்றனர். இசை ராஜாவின் ராஜாங்கம் இனி இங்கிருந்துதான் தொடங்கும் என்பதில், இசை ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து, தமிழ் நெஞ்சங்களுக்கு இசைத் தென்றல்களால் தாலாட்டு பாடிய இளையராஜா, புதிய இடத்தில் இருந்தும் இசை உலகிற்கு புதிய உச்சங்களை அளிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.

Related Stories:

>