தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த  நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னை உள்பட வட தமிழகத்தில் காலையில் மேகமூட்டமும், பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும். சென்னையில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும்.

வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>