×

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் 3 பேர் சஸ்பெண்ட்: வெங்கையா நாயுடு நடவடிக்கை

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே வேளாண் சட்ட விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருகிறது.  குறிப்பாக மாநிலங்களவையில் நேற்று கடும் அமளி நடந்தது. இதனால், சில முறை ஒத்திவைக்கப்பட்டு பின், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார். பின்னர், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கூடுதல் நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்தும் எழுப்பலாம் என்றும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. கடும் அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் இன்று சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.


Tags : MPs ,Aam Aadmi Party ,Venkaiah Naidu , At the state level, Amali, Aam Aadmi Party MP, Suspended, Venkaiah Naidu
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...