×

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்.. பேரறிஞர் அண்ணாவிற்கு ஓபிஎஸ், மு.க,ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் புகழாரம்!!

சென்னை : அண்ணாவின் வீரம் போற்றுதலுக்குரியவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று பின்பற்றப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணாதுரை திராவிட கழகத்தை தோற்றுவித்தவர். திராவிட கட்சிகளுக்கு முன்னோடியாக விளங்கும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி உயிரிழந்தார். அந்த வகையில் அண்ணாதுரையின் நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவர்குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

*திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தந்தை பெரியாரின் தனயன் -
முத்தமிழறிஞர் கலைஞரின்,தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட #அண்ணா-வின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!,எனத் தெரிவித்துள்ளார்.

*மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், “எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

*அதேபோல் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்னாட்டு காந்தி, ‘ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற இலக்கணம் வகுத்து, எளிய மக்களைப் பற்றியே சிந்தித்த தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று! பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

*தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தமிழை சுவாசித்தவர்;
தமிழர்களை நேசித்தவர்;ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

*இதே போல்,பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்திய அளவில் திசை வழியை காட்டியுள்ளது என்றும் பழைமை வாதத்திலிருந்து புரட்சிகரமான அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்த மகத்தான தலைவர் அவர் என்றும் திருமளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : poor ,God ,Grandfather ,MK ,Stalin ,Anna ,OBS ,Kamal , Grandfather Anna, OBS, MK, Stalin, Kamal
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?