×

ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி 91.6% சக்திவாய்ந்தது, பாதுகாப்பானது: பிரிட்டிஷ் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி கொரோனா தடுப்பூசி 91.6% சக்திவாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை விரட்ட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி மருந்து முக்கியமானதாக பார்க்கபப்டுகிறது. அந்நாட்டில் கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 3-ம் கட்ட பரிசோதனையாக கடந்த நவம்பரில் மாஸ்கோவில் 20 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான் சர்ட் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி 91.6% செயல்திறன் வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் செலுத்திய 21 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த மருந்தை செலுத்திய 4 பேர் உயிரிழந்திருப்பதும், அதற்கு ஸ்புட்னிக் - வி தடுப்பூசி மருந்து காரணம் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி மருந்தை லத்தின் அமெரிக்க நாடான அர்ஜண்டினா 3 லட்சம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது. அர்ஜெண்டினாவில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Russia , Russia's Sputnik-V vaccine is 91.6% effective and safe: British medical journal
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!