×

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... தொடர் வீழ்ச்சியில் தங்க விலை.. 3 நாட்களில் ரூ.912 குறைந்து ஒரு சவரன் ரூ.36,328-க்கு விற்பனை!!

சென்னை,: தங்கம் விலை 3வது நாளாக இன்று சவரனுக்கு ரூ.192 குறைந்தது. தங்கம் விலையில் கடந்த சில மாதமாக ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 28ம் தேதி ஒரு சவரன் 36,944க்கு விற்கப்பட்டது. 29ம் தேதி 37,104க்கும் விற்கப்பட்டது. கடந்த 30ம் தேதி ஒரு கிராம் 4,655க்கும், சவரன் 37,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் 296 அளவுக்கு அதிகரித்தது. இது நகை வாங்குவோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.

அதனால், சனிக்கிழமை விலையில் அன்று தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம்  மார்க்கெட் தொடங்கியது. அதில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரனுக்கு 240 குறைந்து ரூபாய் என சரிவை சந்தித்தது. இந்த நிலையில் 2வது நாளாக நேற்று தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை 3வது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,541க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் ரூ.36,328-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதே போல சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ரூ.75.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : jewelery lovers , Gold, price
× RELATED நகை பிரியர்களின் கனவில்...