×

சூரப்பா மீதான விசாரணை: பிப். 11-ம் தேதியுடன் கால அவகாசம் முடிய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்க ஆணையம் முடிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு கால நீட்டிப்பு கோர கலையரசன் விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாளில் அரசிடம் கால நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் சில அதிகாரிகளிடம் விசாரிக்க உள்ளதால் கால நீட்டிப்பு தேவைப்படும் என கூறியுள்ளது. பிப். 11-ம் தேதியுடன் அவகாசம் முடிவடைய உள்ளதால் கால நீட்டிப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரனை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. விசாரணைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்களை நேரிலும் மின்னஞ்சலிலும் அளிக்கலாம் என்று கூறியிருந்தார். விசாரணை ஆணையத்தில் துணை வேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சல் வழியாக புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரு நபரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியிருந்தார். இந்நிலையில் புகார் தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Commission , Surappa, trial, adjournment, extension, Commission decision
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க...