×

13-வது சர்வதேச விமான கண்காட்சி... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்..உலக நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் வானில் சாகசம்!!

பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை  சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அதன்படி  இவ்வாண்டிற்கான 13வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கி 5ம்  தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அதன்படி பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் 13-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.  இந்த தொடக்க விழாவில் மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து அணிவகுத்துச் சென்றனர். விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள்,  சூரியகிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன.இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் சாகசங்கள் செய்கின்றன. இதில் 42 விமானங்கள் தினமும் இருமுறை சாகசத்தில் ஈடுபடுகிறது.  

48,000 கோடி ஒப்பந்தம்

கடந்த ஜனவரி 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு (சிசிஎஸ்) இந்திய விமானப்படையின் போர் வலிமையை உயர்த்துவதற்காக 73 தேஜஸ் எம்.கே -1 ஏ வேரியண்ட்கள் மற்றும் 10 எல்.சி.ஏ தேஜாஸ்  எம்.கே -1 பயிற்சி விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனத்தில் இருந்து வாங்க ₹48,000 கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதை செயல்படுத்தும் வகையில் எலகங்கா விமானப்படை மைதானத்தில் நடக்கும் விழாவில் இன்று மத்திய  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் தேஜாஸ் எல்.சி.ஏவை இந்திய விமானப்படைக்கு வழங்குவது தொடர்பான பணியையும் தொடக்கி வைத்தார். வரும் 2024 மார்ச் முதல் தொடங்கி, மொத்தம் 83 ஜெட்  விமானங்களை வழங்கும் வரை ஆண்டுதோறும் 16 விமானங்கள் உருவாக்கப்படும் என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர். மாதவன் தெரிவித்தார்.

Tags : Rajnath Singh ,sky ,world ,adventure , Air Exhibition, Rajnath Singh
× RELATED தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்