×

தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி

டெல்லி: தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு நீதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி பதில் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார். சேலத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறார்கள். பலர் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தஞ்சை விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தஞ்சை-புதுக்கோட்டை ரோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் அருகே விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் வரத் தொடங்கியிருக்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலும் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

நெய்வேலியில் தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். வேலூரில் சிறிய ரக விமானம் இறங்கும் வகையில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இநத் விமான நிலையம்  வேலூரில்,  அப்துல்லாபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே  உதான் திட்டத்தின்படி திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை நடைபெறும் என  ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது.


Tags : Union government ,Hardeep Puri ,airports ,Tanjore ,Neyveli ,Vellore ,Ramanathapuram , Tanjore, Neyveli, Vellore, Ramanathapuram, Airport, Allotment
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...